Friday, March 28, 2008

ஆசை காட்டி மோசம் செய்யும் வைரஸ்கள்

ஆசை காட்டி மோசம் செய்யும் வைரஸ்கள்
1
2
போர்னோ சமாச்சாரம், இலவச சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் பாதுகாப்பு. வைரஸ் `எழுத்தாளர்கள்' இந்த மூன்றையும் சொல்லி ஆசை காட்டித்தான் கம்ப்யூட்டர் பயனாளிகளை மோசம் செய்கிறார்கள்.

"என் படுக்கையறைக் காட்சிகளை இலவசமாகப் பாருங்கள்!" என்று ஒரு ஈ-மெயில் வரும். அல்லது "இந்த சாஃப்ட்வேரை டவுன்லோட் செய்யுங்கள்! இன்டர்நெட்டில் நீங்கள் விட்டுச் சென்ற தடயங்களை நீக்குங்கள்!" அல்லது "ஹலோ, இது மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கின் லேட்டஸ்ட் அப்டேட். இதை இன்ஸ்டால் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும்" என்று உதவி செய்யப் பார்க்கும். . .

இப்படிப்பட்ட ஈ-மெயில்களை நம்பி அதில் இருக்கும் அட்டாச்மென்ட்களை க்ளிக் செய்து தொலைப்பவர்கள் பலர். இவர்கள் புண்ணியத்தில்தான் பல வைரஸ்களுக்கு உலகப் புகழ் கிடைக்கிறது. ஐலவ்யூ, மெலிஸா, அன்னா கோர்னிகோவா, சர்கேம் என்று ஆன்லைன், ஆஃப்லைன் உலகங்களை உலுக்கியெடுத்த வைரஸ்கள் எல்லாம் நம்மை ஏமாற்றித்தான் பரவின.

இந்த மாதிரி டிஜிட்டல் கிருமிகள் இப்போது ஈ-மெயில் மூலமாக மட்டுமில்லை, இன்ஸ்டன்ட் மெசேஜிங், இன்டர்நெட் ரிலே சாட் (ஐ.ஆர்.சி.) போன்ற மீடியங்கள் மூலமும் பரவத் தொடங்கியிருக்கின்றன.

அதாவது ஒரு கம்ப்யூட்டர் கிரிமினல் இன்டர்நெட் சேவை நிறுவன அதிகாரி என்ற போர்வையில் ஒரு அப்பாவி கம்ப்யூட்டர் பயனாளிக்கு ஃபோன் செய்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்தப் பயனாளி அதை நம்பி அவனிடம் தன் ஃபோன் நம்பர், க்ரெடிட் கார்டு எண் போன்ற ரகசியத் தகவல்களைக் கொடுத்துவிட வாய்ப்பிருக்கிறது. இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு அந்த கிரிமினல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

Wednesday, March 12, 2008

அமெரிக்காவில் ஐ.டி வருவாய் பாதிப்பு

அமெரிக்கப் பொருளாதாரம் கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே மந்தமடைந்து வருகிறது.

இதனால் அந்த நாட்டை நம்பி இங்கு பிழைப்பு நடத்தும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வருவாய் விகிதத்தில் குறிப்பிடத்தக்க அளவு மந்த நிலை பிரதிபலிக்கலாம் என்று இந்த துறையை சேர்ந்த கணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க முடியா விட்டாலும் முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களின் 4ம் காலாண்டு வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

டி.சி.எஸ் நிறுவனத்தின் 10 முன்னணி அமெரிக்க வாடிக்கையாளர்களில் இரண்டு நிறுவனங்கள் தங்கள் புரோஜெக்டுகளை தாமதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அதாவது இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது தகவல் தொழில் நுட்ப செலவினங்களை தாமதப்படுத்துவதாக, டிசிஎஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி சந்திரசேகரன் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

டி.சி.எஸ் மட்டுமல்ல இன்னும் பல முன்னணி நிறுவனங்களுக்கு வந்து சேர வேண்டிய பணிகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் 2008ம் ஆண்டு ஐ.டி. நிறுவனங்களுக்கு அவ்வளவு லாபம் தரும் ஆண்டாக இருக்காது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் வங்கிகள் சப் பிரைம் என்ற அநாயச கடன் திருவிழாவை நடத்தி வருவதால் அதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பல வங்கிகள் தங்களது தகவல் தொழில் நுட்ப பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது.

Sunday, March 9, 2008

கணினி பராமரிப்பிற்கு 8 ஆலோசனைகள்

உங்கள் கணினிகளை சிறப்பான செயல்திறனுடன் பராமரிப்பாக வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.

தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணினிதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணினியில்தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.

நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணினிவழிதான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம். இந்த நிலையில் கணினி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்?

நாம் கணினியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது. அல்லது நாம் சேமித்து வைத்டிருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணினியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது?

இதுபோன்ற நிலையைத் தவிர்த்து, நம் கணினியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.

கணினிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணினியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் ஹார்ட் டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

வைரஸ் ஒழிப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்: எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.

சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.

தெரியாமல் "டிலீட்" பொத்தானை அழுத்தி விட்டீர்களா?

கணினியில் உள்ள கோப்புகளை தெரியாமல் நீக்கி விட்டீர்களா? கவலை வேண்டாம். இழந்த கோப்புகளையும், ஆவணங்களையும் மீட்டெடுக்கலாம்.

நீங்கள் எம்.எஸ். வேர்டில் ஒரு ஆவணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெரியாமல் அதனை "டிலீட்" செய்து விடுகிறீர்கள் என்றால், உங்கள் புரோஜெக்ட் லீடரிடம் தெரிவிக்க முடியாது. அதற்காக கவலை வேண்டாம், ஃபைன் ரெகவரி என்ற சாஃப்ட்வேர் மூலம் நீக்கியதை மீட்டெடுக்க முடியும்.

உங்கள் கணினியின் ஹார்டு ட்ரைவிலிருந்து நீக்கிய கோப்புகளை இந்த ஃபைன் ரெகவரி மென்பொருள் திரும்பவும் உங்களுக்கு மீட்டெடுத்துக் கொடுக்கும். இது இலவச மென்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மென்பொருள் இணைய தளத்தில் கிடைக்கிறது. அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். டவுன்லோடு செய்வதற்கு நாம் கட்டணம் கொடுக்க வேண்டும். ஆனால் ஃபைன் ரெகவரி மென்பொருளுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லை.

நாம் கோப்புகளை நீக்கும்போதோ அல்லது அழிக்கும்போதோ, விண்டோஸ் அதனை முழுதும் ஒழித்து மூடி விடுவதில்லை. மாறாக டிரைவில் அதனை மறைத்து வைத்திருக்கும். ஃபைன் ரெகவரி மென்பொருள் உங்கள் கணினியை முழுதும் ஸ்கேன் செய்து நீங்கள் நீக்கியதாக நினைத்து அஞ்சிய கோப்புகளை உங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும்.

-Thanks : msn

Monday, March 3, 2008

தங்கம் விலையில் மீண்டும் புதிய உச்சம்

சர்வதேச சந்தையில் இன்று ஏற்பட்ட உயர்வு காரணமாக தங்கத்தின் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 959 அமெரிக்க டாலராக உயர்ந்த நிலையில், ஆசிய சந்தையிலும் தங்கத்திற்கான தேவைப்பாடு இன்று மிக அதிகமாக காணப்பட்டது.

இதன் எதிரொலியாக மும்பை மற்றும் சென்னை சந்தைகளில் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்குபோதே 10 கிராமுக்கு முறையே ரூ. 12, 290 மற்றும் ரூ. 12, 245 ஆக காணப்பட்டது.

பின்னர் இதுவரை இல்லாத அளவிற்கு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 12, 415 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

(மூலம் - வெப்துனியா)

தங்கம் விலையில் மீண்டும் புதிய உச்சம்

சர்வதேச சந்தையில் இன்று ஏற்பட்ட உயர்வு காரணமாக தங்கத்தின் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 959 அமெரிக்க டாலராக உயர்ந்த நிலையில், ஆசிய சந்தையிலும் தங்கத்திற்கான தேவைப்பாடு இன்று மிக அதிகமாக காணப்பட்டது.

இதன் எதிரொலியாக மும்பை மற்றும் சென்னை சந்தைகளில் தங்கத்தின் விலை இன்று காலை வர்த்தகம் தொடங்குபோதே 10 கிராமுக்கு முறையே ரூ. 12, 290 மற்றும் ரூ. 12, 245 ஆக காணப்பட்டது.

பின்னர் இதுவரை இல்லாத அளவிற்கு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 12, 415 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

(மூலம் - வெப்துனியா)