Sunday, January 4, 2009

கணினி தொடர்பான தகவல்கள்

கணினி தொடர்பான தகவல்கள்

Thursday, June 19, 2008

உங்கள் விருப்பபட்ட உணவுகளை 'ஆர்டர்' செய்ய www.eatyourheartout.ae



அமீரகத்தில் உங்கள் விருப்பபட்ட உணவுகளை 'ஆர்டர்' செய்ய www.eatyourheartout.ae இணையதளம்





ஈட் யிவர் ஹாட் அவ்ட் என்ற இணைய தளம் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அரபு அமீரகத்தில் ஆரம்பிக்க பட்டது, இந்த இணையத்தளம் தனது ஒரு ஆண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது, இதன் மூலம் அமீரகத்தில் வசிக்கும் கம்ப்யூட்டர் பயனாளர்கள் பலர் பயன் அடைந்து உள்ளார்கள் ,இதன் சிறப்பு என்னவென்றல் 'ஆர்டர்' செய்தவுடன் உங்கள் இருப்பிடம் தேடி உணவுகள் டெலிவரி செய்ய படும் ,மேலும் அமீரத்தில் உள்ள தரமான அனைத்து வகையான உணவு விடுதிகளும் இடம்பெறுகிறது,உலகில் உள்ள அனைத்து வகையான உணவு வகைகளும் இந்த இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது .

ராயல்டி பாயின்ட் திட்டம்

விரைவில் ராயல்டி பாயிண்ட் திட்டம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என்று இந்த போர்டலின் CEO மிஸ் தீடா சொல்கிறார் , மேலும் அவர் கூறியதாவது எங்கள் போர்ட்டல் பயனாளர்களை ஊக்கிவிக்கும் பொருட்டு அதிகளவில் பயன்படுத்தும் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரிவார்ட்ஸ் வழங்க இருக்கிறது.

Tuesday, May 20, 2008

எம்.எஸ்.வேர்டு: சில உபயோகமான டிப்ஸ்...

எம்.எஸ்.வேர்டு: சில உபயோகமான டிப்ஸ்...
1
2
மைக்ரோசாஃப்ட் வேர்டு என்பதை கணினியை உபயோகிக்கும் அனைவரும் அறிந்திருப்பர். என்றாலும் சில ஷார்ட்கட்களை பயன்படுத்து பணிகளை சுளுவாக முடிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட் டிப்ஸ்களை உபயோகிக்கவும்.

எம்.எஸ். வேர்டில் புல்லட் குறிகளை உருவாக்க ஃபார்மேட் மெனுவிற்கு செல்ல வேண்டிய தேவையில்லை, மேலும் பிரதியைத் தேர்வு செய்து ரைட் கிளிக்கும் செய்ய வேண்டியதில்லை. தேவையான பகுதியை தேர்வு செய்து கன்ட்ரோல்+ஷிஃப்ட்+எல் அழுத்தினால் போதுமானது. புல்லெட் குறிகளை நீக்க வேண்டுமானால் கன்ட்ரோல்+ஷிஃப்ட்+என் அழுத்தவும்.

பிரதியை மையப்படுத்த மவுஸ் தேவையில்லை. கன்ட்ரோல்+ஈ-யை அழுத்தினால் போதுமானது.

வார்த்தைகளுக்கு இடையே பெரிய டேஷ் மற்றும் சிறிய டேஷ் நுழைக்க: சிம்பல் மெனுவிலிருந்து டேஷ்-ஐ எடுத்து நுழைக்க நேரம் செலவாகிறதா? விசைப்பலகையில் உள்ள "ஆல்ட்" பொத்தானை அழுத்தியபடி 0151 என்று டைப் செய்தால் பெரிய டேஷும், ஆல்ட் அழுத்திக்கொண்டே 0150 என்று டைப் செய்தால் சிறிய டேஷும் தானாகவே வரும். இதனை பயன்படுத்த நம்பர் லாக் ஆன் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

வேர்ட் 2007-ல் ஸ்க்ரீன் டிப்ஸை மறைக்க: சிலருக்கு ஸ்க்ரீன் டிப்ஸ் எரிச்சலை ஏற்படுத்தலாம். ஆஃபீஸ் பொத்தான் மெனுவை கிளிக் செய்க பிறகு வேர்ட் ஆப்ஷனுக்கு செல்க. இப்போது திறக்கும் பெட்டியில் பாப்புலர் என்பதை தேர்வு செய்க. ஸ்க்ரீன் ஸ்டைல் ட்ராப் டவுனில் டோன்ட் ஷோ ஸ்க்ரீன் டிப்ஸ் என்பதை தேர்வு செய்து ஓ.கே கிளிக் செய்யவும்.

வேர்ட்- 2007ல் வார்த்தைக் களஞ்சியத்தை பயன்படுத்த: ரிவியூ டேபிளிலிருந்து தெசாரஸ் என்பதை தேர்வு செய்க. விசைப்பலகையில் உள்ள ஆல்ட் பொத்தானை அமுக்கியபடி, எந்த வார்த்தைக்கு மாற்று வார்த்தைகள் தேவையோ அதனை செலெக்ட் செய்க.

முடிவுகள் ரிசர்ச் டாஸ்க் சில்லில் தோன்றும். இதில் உங்களுக்கு தேவையான வார்த்தையைக் கொண்டுவர அதன் மீது கர்சரை வைத்து கீழ் நோக்கிய அம்புக் குறியை விசைப்பலகையில் தட்டவும், பிறகு இன்சர்ட் என்பதை தேர்வு செய்யவும்.

பணி இடத்திலிருந்து ரூலர் என்பதை அகற்ற: டைப் அடித்த பிரதியை ஒழுங்குபடுத்தவும் வரிசைக்கிரமப்படுத்தவும் உதவும் கருவி ரூலர். இது வேண்டாம் என்றால் வியூ மெனுவிற்குச் சென்று ரூலர் என்பதை கிளிக் செய்தால் அது மறைந்து விடும். பிறகு அதை மீண்டும் கிளிக் செய்தால் பயன்பாட்டிற்கு வந்து விடும்.

உங்கள் பிரதியில் இமேஜ் சேர்க்க வேண்டுமா? : இன்சர்ட் சென்று செலெக்ட் பிக்சர் செய்யவும், பிறகு கோப்பிலிருந்து இமேஜை எடுக்கவும் அதனைத் தேர்வு செய்து இன்சர்ட் என்பதை கிளிக் செய்யவும்.
1
2

Wednesday, May 7, 2008

இந்தியாவில் ஐஃபோன்: ஆப்பிள்-வோடஃபோன் ஒப்பந்தம்

Apple - iPhone
டெல்லி: இந்தியாவில் ஐஃபோன்களை விற்க முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் செல்ஃபோன் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்பட 9 நாடுகளில் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன ஐஃபோன் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா, ஆஸ்திரேலியா, செக் குடியரசு, எகிப்து, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுகல், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் ஐஃபோன் சேவையை பெறுவார்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐஃபோன் என்பது எச்டிஎம்எல் இ-மெயில் மற்றும் பிரவுசிங் வசதி கொண்ட மொபைல் ஃபோன். இதன்மூலம் இன்டர்நெட்டில் அநாயாசமாக பிரவுஸ் செய்யலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புக் மார்க்குகளை தானாகவே சின்கரனைஸ் செய்யும் வசதிகூட உண்டு. கூகுள், யாகூ சர்ச் இன்ஜின்கள் இன்பில்ட்டாக உள்ளது.

வயர்லெஸ் கனெக்ஷ்ன் மூலம் செய்திகள் அல்லது படங்களை இ-மெயிலில் அனுப்பிக் கொண்டிருக்கும்போதே தொலைபேசியிலும் பேசமுடியும். ஒரேநேரத்தில் பல இயக்கங்களை செய்யக்கூடியது ஐஃபோன்.

இந்தியாவில் ஐஃபோன்களை விற்பதற்கு முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ஆப்பிளுடன் வோடஃபோன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Tuesday, April 29, 2008

அதீத வளர்ச்சியை நோக்கி ஆன்லைன் விளம்பரங்கள்

12
இணையதள பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 5 கோடியையும் தாண்டிவிட்ட நிலையில், இணையதள வங்கி நடவடிக்கைகள் நாளுக்கு நாள் பெருகிவந்த போதிலும், ஆன்லைன் விளம்பர வருவாயோ நோஞ்சானாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது ரூ.250 கோடி சந்தையாக உள்ள ஆன் லைன் விளம்பரச்சந்தை 2011-ம் ஆண்டில் 10 மடங்கு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சுற்றுலாத் துறைக்கு அடுத்தபடியாக ஆன் லைன் விளம்பரங்களுக்காக அதிகம் செலவு செய்யும் துறைகள் வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறை ஆகிய நிதி தொடர்பான நிறுவனங்களே.
மும்பையில் உள்ள முன்னணி தேடல் எந்திர மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்குனர் இதுகுறித்து கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக வங்கி, நிதி, சேவைகள் மற்றும் காப்பீட்டுத் துறைகள் அடங்கிய பி.எஃப்.எஸ்.ஐ துறைகள் ஆன்லைன் விளம்பரச் செலவுகளை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
முன்பெல்லாம் காப்பீடு முகவர் மூலம் நடந்து வந்த பாலிசி விற்பனைகள் தற்போது காப்பீடு நிறுவனங்களின் ஆன்லைன் விளம்பர பேனர்கள் மூலமே அதிகம் நடைபெறுவதாக அவர் தெரிவிக்கிறார்.
தேடல் எந்திரங்களில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு விழும் கிளிக் எண்ணிக்கைகள் கடுமையாக அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
அவிவா காப்பீட்டு நிறுவனம் தனது விளம்பரச் செலவுகளில் 5 சதவீதத்தை ஆன்லைன் விளம்பரங்களுக்காக செலவு செய்வதாக அந்த நிறுவனத்தின் இணை இயக்குனர் விஷால் குப்தா தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் ஊழியர்கள் தங்கள் நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் இணைய தளங்கள் மூலமே செய்து வருவதால், ஆன் -லைன் மட்டுமல்லாது எந்த ஒரு டிஜிட்டல் மீடியாவிலும் விளம்பரங்களைக் கொடுக்க நிதி சார்ந்த நிறுவனங்கள் தயங்குவதில்லை.
மேலும் இணையதள விளம்பரங்கள் மூலம் இந்த நிதிச்சேவை, காப்பீட்டு, வங்கிகளின் வர்த்தக வருவாய் 100 முதல் 150 சதவீதம் அதிகரித்துள்ளது.
செலவுகளும் இதனால் குறைவதால் இதன் வளர்ச்சி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வலைப்பதிவாளர்களுக்கான டிப்ஸ்


12
இணையதளம்
'பிளாக்ஸ்' (Blogs)... இணையதளத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் பரிச்சயமான ஆங்கிலவார்த்தை இது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு Blog-ஐ (வலைப்பதிவுத்தளம்) உருவாக்கிக் கொள்ளலாம்.
உலகம் முழுதும் பல லட்சம் பேர் வலைப்பதிவுகளில் தீவிரமாக எழுதி வருகின்றனர். இதில் உங்கள் எழுத்துக்களுக்கான வாசகர்களை தக்கவைப்பது சற்று கடினமான காரியம் தான்.
சிலருக்கு எழுதுவது என்றால் பிடிக்கும். இதன் காரணமாக வீட்டில் டைரி எழுதுவதற்கு பதிலாக வலைத்தளத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கென்று ஒரு தனி வாசகர்(கள்) வட்டம்.
நீங்கள் பிரபலமானவராக இருந்தால், உங்கள் வலைத்தளத்தில் பாட்டி வடை சுட்ட கதையை எழுதினால் கூட நிறைய பேர் வந்து படிப்பார்கள். உங்களை யாரென்றே தெரியாத போது நீங்கள் அர்த்தமுள்ள விஷயங்களை படு ஆழமாக அலசினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
எழுதுவதற்கு முன் ஒரு சிறிய ஆராய்ச்சியை மேற்கொண்டால் நீங்கள் சொல்ல வருவதை ஏற்கன்வே பலர் கூறியிருப்பார்கள் என்பதை அறியலாம். யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகிவிட்ட பிறகு மோசமான எழுத்துக்களும் வலைப்பதிவுத் தளங்களில் தற்போது குப்பை லாரி போல் குவிந்து வருகிறது.
ஆன்லைனில் கிடக்கும் விஷயதாரங்களில் உங்கள் எழுத்திற்கென்று ஒரு பிரத்யேக கும்பலை திரட்டுவது என்பது கடினம்தான். இருப்பினும் கீழ்வரும் டிப்ஸ்களை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்:
1. எதைப்பற்றி சொல்ல வருகிறீர்கள் என்பதை விளக்கமாக கூறி விட வேண்டும். உங்கள் சொந்த வாழ்க்கையின் சிறுசிறு தகவல்களை எல்லோரும் விரும்பிப் படிப்பார்கள் என்று கூற முடியாது. உங்களுக்கு அது சுவையாக தெரியலாம். ஆனால் வாசகர்கள் உங்களைப் பற்றிய சொந்த விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.
எனவே பலதரப்பட்ட விஷயங்கள் பற்றியும் தனிச் சிறப்பாக உங்களுக்கு ஏதாவது தெரிந்திருந்தால் அதை புரியும் படியாக முதலில் எழுத வேண்டும். உங்கள் எல்லை எது என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டு அதனை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.
2. உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் அனைத்து விவரங்களையும் உங்கள் விரல் நுனியில் வைத்திருப்பது அவசியம். மேற்கோள் காட்டும்போதும், புள்ளி விவரங்களை அளிக்கும்போதும் அதனை எங்கிருந்து பெற்றீர்கள் என்பதை குறிப்பிடுவதால் உங்கள் வலைத்தளத்திற்கு நம்பகத்தன்மை கூடும். சீரான வலைப்பதிவாளர் என்ற பெயரை வாசகர்களிடையே உருவாக்க உங்களின் அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.